Posts

Showing posts from August, 2018

எந்த நடிகைகளுக்கு இல்லாமல் சமந்தாவுக்கு கிடைத்த பெருமை!

Image
அண்மையில் அவர் நடிப்பில் நடிகையர் திலகம், இரும்பு திரை என படங்கள் வெளியாகி வெற்றி பெற்றது. பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் அவர் ஜோடியாக நடித்து சீமராஜா செப்டம்பர் 13 ல் விநாயர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இத்துடன் அவர் ஹீரோயினை மையப்படுத்திய கதையில் நடித்துள்ள யூ டர்ன் படமும் வெளியாகவுள்ளது. இதனோடு அவர் நடித்திருக்கிற நெஞ்சமெல்லாம் பல வண்ணம் படமும் வெளிவருகிறது. இதில் அவருடன் மகேஷ்பாபு, வெங்கடேஷ், அஞ்சலி நடித்தள்ளனர். இதே கூட்டணியில் தெலுங்கில் எடுக்கப்பட்ட சீதம்மா வகிட்லோ ஸ்ரீமல்லெ செட்டு என்ற படத்தின் தமிழ் டப் தான் இது. தென்னிந்திய சினிமாவை சேர்ந்த நடிகைகளில் சமந்தாவுக்கு மட்டுமே இப்படி ஒரே நாளில் 3 படங்கள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த குட்டி ஸ்டார்! எல்லோருக்கும் பிடித்த பிரபலம்

Image
வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள சீமராஜா செப்டம்பர் 13 ல் ரிலீஸ் ஆகிறது. அடுத்ததாக அவர் ரவிக்குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக ராஜேஷ் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளார். அத்துடன் தன் சொந்த தயாரிப்பில் கனா படத்தை எடுத்துள்ளார். இப்படத்தை அவரின் நண்பர் அருண்ராஜா காமராஜா இயக்கியுள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா பாடியுள்ளாரா. அவருடன் விஜயலெட்சுமியும் வாடியாடி பெத்த மகளே பாடலை பாடியுள்ளாராம். திபு இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வரும் ஆகஸ்ட் 23 ல் வெளியாகவுள்ளது.

அஜித்தின் விசுவாசம் படம் குறித்து ஹாட் அப்டேட்- அடுத்த என்ன?

Image
வரும் ஜனவரி 2019 பொங்கலுக்கு வரும் என்பது உறுதியாகிவிட்டது. படக்குழுவும் நேரத்தை வீணாக்காமல் விறுவிறுப்பாக பட வேலைகளை கவனித்து வருகின்றனர். பட ஆரம்பம் முதல் ஹைதராபாத்தில் தான் அதிக படப்பிடிப்பு நடந்து வருகிறது. தற்போது படத்தின் முக்கிய நடிகர்கள் இடம்பெற சூட்டிங் நடந்து வருகிறது. இப்போது நடந்து வரும் படப்பிடிப்பு வரும் 24ம் தேதி வெள்ளிக்கிழமையோடு முடிவடைகிறதாம். இந்த படப்பிடிப்பை சேர்த்து படத்தின் 70% காட்சிகள் முடிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தக்கட்ட வேலை செப்டம்பர் மாதம் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

யார் அந்த குழந்தை என்னைப் போலவே செய்கிறார்- சுட்டி குழந்தை குறித்து ரோபோ ஷங்கரிடம் கேட்ட அஜித்

Image
அண்மையில் அஜித் குறித்து ஒரு விஷயம் கூறியுள்ளார் நடிகர் ரோபோ ஷங்கர். இவர் இப்போது அஜித்துடன் விசுவாசம் படத்தில் நடித்து வருகிறார், அதோடு சின்ன குழந்தைகள் பங்குபெறும் Kings Of Comedy Juniors 2 என்ற நிகழ்ச்சியிலும் நடுவராக இருக்கிறார். அதில் 5 வயது ஒரு குட்டி குழந்தை அஜித்தை போல் நடித்திருந்தார். அதைப் பார்த்த அஜித், ரோபோ ஷங்கரிடம் யார் அந்த குட்டி குழந்தை, அழகாக நடிக்கிறார் என்னைப் போலவே என்றாராம். அதோடு அஜித் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததாக ரோபோ ஷங்கர் கூறியுள்ளார்.

அட நம்ம தொகுப்பாளினி பிரியங்காவா இது?- லைக்ஸை குவிக்கும் ரசிகர்கள்

Image
ஆரம்பத்தில் இவருக்கு பெயர் கிடைக்கவில்லை என்றாலும் இப்போது பலருக்கு பேவரெட். இவர் நிறைய காமெடிகள் செய்து, தன்னைத் தானே கிண்டல் செய்து கொள்வது என கலகலப்பாக தொகுத்து வழங்குவார். இந்த நிலையில் இவர் ஒரு புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார், அதில் பிரியங்கா தேவதை போல் உடை அணிந்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மட்டும் இல்லாது புகைப்படம் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.